ஜிஎஸ்டி வரி உயர போகிறதா….? சட்டப்பேரவையில் பேட்டி பிடிஆர் அளித்த விளக்கம்…!!!!!!

ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு உயா்த்தப்போகிறதா என பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின் பாமக தலைவர் ஜி.கே.மணி அரசின் கவனத்தை ஈர்த்து பேசியுள்ளார். அப்போது அவர் ஜிஎஸ்டியை  ஒன்றிய அரசு உயர்த்த போவதாக செய்திகள் வருகிறது. பொதுமக்கள் கொரோனா காரணமாக பொருளாதாரரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டியை  உயர்த்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

அதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து பேசிய போது, ஜிஎஸ்டி கொண்டு வரும்போது மாநிலங்களுக்கான வரி விதிக்கும் உரிமையை பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவசரம் அவசரமாக இதை செயல்படுத்துவதன் காரணமாக பல்வேறு விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருந்தது. மேலும் நாடு முழுவதும் ஒரே வழி அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகின்ற நிலையில் எதிர்பார்த்த வருவாய் அரசிற்கு வரவில்லை. இந்த நிலையில் ஜிஎஸ்டிக்கான இழப்பீட்டை மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் முடிக்காமல் கூடுதலாக வழங்க வேண்டும் என எல்லா மாநிலங்களும் கேட்டு வருகின்றது.

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சரிடம் இதுபற்றி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதனை ஒன்றிய அரசு நீடிப்பதாக தகவல்கள் இல்லை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல ஆயிரம் கோடி வருமானம் குறையும். அதனை  சீா்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் மூலமாக செப்டம்பா் மாதத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் இரண்டு குழுக்களை உருவாக்கியுள்ளனர். ஒன்று நிலைக் குழு. அந்தக் குழுவின் பணி, ஜிஎஸ்டி அமைப்பை சீா்திருத்தம் செய்வதாகும். அதில் என்னையும் ஓா் உறுப்பினராகச் சேர்த்திருக்கின்றனர். அதோடு துணைக் குழு ஒன்றையும் உருவாக்கியிருகின்றனர். அதில் நான் இல்லை. இதுவரை அந்தக் குழுக்கள் எந்த அறிக்கையையும் சமா்ப்பிக்கவில்லை.

மேலும், இதுவரை அந்தக் குழுக்களின் ஒரு கூட்டம் கூட கூட்டப்படவில்லை. பிறகு எப்படி அறிக்கை சமா்ப்பிக்க முடியும்? அதனால், எத்தனையோ வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றனவே தவிர, அவை நிஜம் அல்ல.இரண்டே இரண்டு செய்திகள் மட்டும் உண்மை. ஜிஎஸ்டியால் அனைத்து அரசுகளுக்கும் வருமானம் குறைந்திருக்கிறது. அதைத் திருத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒன்றிய அரசு உள்ளது. அதைப்போல மாநிலங்களுக்கு இழப்பீட்டைத் தொடா்ந்து வழங்கும் எண்ணமும் ஒன்றிய அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால், வதந்திகள் வருவதை தவிா்க்கும் வகையில் ஒன்றிய நிதியமைச்சகத்துக்கு கடிதம் எழுத இருக்கிறோம்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *