ஜாலியோ ஜாலி!…. கைதிகளுக்கு தடபுடலான அசைவ விருந்து…. எங்கென்னு தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி நாளை அக்டோபர் 5ஆம் தேதி முடிவுக்கு வருவதால், தாண்டியா, கர்பா ஆகிய நடனங்களை ஆடியும், பூஜை செய்தும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிறைச்சாலை கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பாக அசைவ விருந்து கொடுத்திருக்கின்றனர். கொல்கத்தாவில் Presidency Central Correctional Home எனும் சிறையில் உள்ள 2,500 கைதிகளுக்கு அக்டோபர் 2 -5ஆம் தேதி வரை தடபுடலான விருந்து கொடுக்கின்றனர்.

மகா அஷ்டமியாக உள்ளதால் நேற்று மட்டும் சைவ விருந்து வழங்கப்பட்டிருக்கிறது. மேற்குறிப்பிட்ட மற்ற நாட்களில் காலை மதியம் என 3 வேளைகளிலும் அசைவம், சைவம் என எல்லாவகை உணவும் வழங்கப்படுகிறது. துர்கா பூஜையை எப்போதும் வங்காளிகள் சிறப்பாக அசைவ உணவ சாப்பிட்டு கொண்டாடுவது வழக்கமாகும். இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையிலேயே கொல்கத்தா சிறை நிர்வாகம் கைதிகளுக்கு விருந்து வைக்கிறது.

இந்த விருந்து வழக்கம்போல் வருடந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், மேற்கு வங்கத்தின் முன்னாள் கல்வி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பார்தா சட்டர்ஜி WBSSC-இன் பள்ளி சேவை ஆணைய பணி நியமனத்தில் முறைகேடு செய்த புகாரில் சிறையில் இருப்பதால் அவருக்கு வசதியை கொடுப்பதற்காகவே இந்த விருந்து முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்று குற்றச்சாட்டு பெறப்பட்டுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டை சிறை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. சிறை வாழ்க்கையில் கைதிகளுக்கு சில ரிலாக்சேஷன் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பண்டிகைகளில் இவ்வாறு விருந்து வைப்பது வாடிக்கையாளர் ஒன்று என்று தெளிவுபடுத்தி உள்ளது.