அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு மீண்டும் மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த மறுநாளே அவர் அமைச்சராக பதவி ஏற்றது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர்களின் குற்ற சாட்டில் நியாயம் உள்ளது என்றனர்.

அதன்பிறகு ஜாமினில் வெளியே வந்த மறுநாளே  அமைச்சராக பதவியேற்றது ஏன் என்று செந்தில் பாலாஜியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, அமைச்சராக பொறுப்பேற்றதால் சாட்சிகளை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறினர். மேலும் இது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பு பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கின்  விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது