தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் தன்னுடைய மகனை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் மகன் ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டு அடம் பிடித்துள்ளார். அதனை வாங்க சோலைகொட்டாய் பகுதியில் உள்ள மெயின் ரோடு ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சாலையை கடப்பதற்காக நடைமேடையில் சின்னசாமி நின்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த சின்னசாமி மீது வேகமாக வந்து மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மகன் கண் முன்னே தந்தை சின்னசாமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.