ஜாமினில் வெளியே வந்த கொள்ளையன்… மீண்டும் கோவில் உண்டியல் உடைப்பு… தப்பி ஓட முயன்ற போது வசமாக மாட்டினார்… தீவிர விசாரணை…!!!!

ஜாமினில் வெளியே வந்த கொள்ளையன் மீண்டும் கோவில் உண்டியலை உடைத்து திருடும் போது வசமாக சிக்கிக் கொண்டார்.

கடலூர் அருகில் கோண்டூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 27 வயதுடைய மகேஷ். நேற்று முன்தினம் அதிகாலை இவரும் இவருடைய நண்பர்களான திவாகர், புகழேந்தி ஆகிய 3 பேரும் கோண்டூரிலிருந்து சாவடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது நெல்லிக்குப்பம் மெயின் சாலையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஒரு வாலிபர் பூட்டை கடப்பாரையால் உடைத்துக் கொண்டு இருந்தார். இதை பார்த்த அவர்கள் 3 பேரும் திருடன், திருடன் என்று கத்தி சத்தம் போட்டார்கள்.

இந்த சத்தத்தை கேட்டு அந்த வாலிபர் அருகிலிருந்த மாடிவீட்டில் ஏறி தப்பிக்க முயன்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள், இளைஞர்கள் மடக்கிப்பிடித்து சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து மகேஷ் கடலூர் புறநகர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி திருவரம்பூர் வடக்கு காட்டூரில் வசித்த அமரேசன் என்பவருடைய மகன் நிர்மல் குமார் என்ற அணில் குமார்(31) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரித்தபோது ஆதிபராசக்தி கோவிலில் திருட முயன்றதும், அதற்குள் இளைஞர்களிடம் மாட்டிக் கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீது பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 10 வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்துள்ளது. திண்டுக்கல்லில் ஒரு திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அனில்குமார் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் மீது கடலூர் மாவட்டத்தில் வேறு ஏதேனும் இருக்கின்றதா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *