ஜாக்பாட்…! இனி அனைத்தும் ஒரே செயலியில்….. ரிசர்வ் வங்கியின் புதிய சேவை…!!!!

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் ஆனது இதுவரை மக்கள் விற்பனையாளர்கள் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான மாத அடிப்படையில் காலாண்டு அடிப்படையில் வரும் பில் களை மட்டுமே செலுத்தி வரப்பட்டது. இந்த நிலையில் ஆர்பிஐ இந்த சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீட்டு வாடகை, கல்விக் கட்டணம், வரிகள் மற்றும் பிற கட்டணங்களை ஒரே அப்ளிகேஷனில் செலுத்தும் வண்ணம் ரிசர்வ் வங்கி புதிய அறிமுகத்தை செய்ய உள்ளது.

பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் (BBPS) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சேவையின் மூலம் அனைத்து பில்களையும் ஒரே இடத்தில் செலுத்தலாம். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.