ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்வது அவசியம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 12 மாலை 5 மணி வரை விவரங்களை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு வயது சான்றிதழ், கொரோனா தடுப்பு ஊசி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வீரர்கள் https://madurai.nic.in/என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் பதிவு பெற்று  டோக்கன் கிடைக்கப்பெறும் காளைகளும், மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.