ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றமே விதிகளை வகுக்கலாம்…. தமிழக அரசு…!!!!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி 2008 ஆம் வருடம் விலங்குகள் நல வாரியம் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பீட்டா உள்ளிட்டா அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு தொடர்பாக சில விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தில் ஒரு பகுதி.

தேவைப்பட்டால் நீதிமன்றமே போட்டி தொடர்பான கூடுதல் விதிகளை வகுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிபதிகள் கேட்ட நிலையில் அதற்கும் தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.