தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பாண்டில் நடைபெறுவதற்கு தேவையான முன் அனுமதி தொடர்பான விவகாரம் தமிழகத்தில் இருந்தது. இதன் காரணமாக அரசு பலவிதிமுறைகளுக்குட்பட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடு உரிமையாளர்கள் தங்கள் பெயர்களை https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வீரர்கள் கொரோனா தடுப்பூசி, வயது சான்று, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.