“ஜப்பான் நாட்டின் மீது பறந்த ஏவுகணை”… மக்களுக்கு அரசு எச்சரிக்கை…!!!!

வடகொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியுள்ளது. இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமைந்தது. இதனை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன் ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017 ஆம் வருடத்திற்கு பின் ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் ஏவுகணை இதுவாகும்.

இந்த நிலையில் அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஜப்பான் ராணுவ பயிற்சிக்கு மத்தியில் 10 நாட்கள் தென்கொரியாவின் ஏவுகணை வீசப்பட்டிருக்கிறது. தென் கொரியாவின் கூட்டுப்படை தலைவர்கள் தெரிவித்துள்ள படி ஏவுகணை வடகொரியாவின் சீனாவுடனான மத்திய எல்லைக்கு அருகே  முப்யோங் ரியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 7 மணி 23 நிமிடத்தில் ஏவப்பட்டுள்ளது. மேலும் இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்னதாக ஜப்பானின் தோஹோகு பகுதியில் அதிகபட்சமாக 1000 கிலோ மீட்டர் உயரத்தில் 20 நிமிடங்களுக்கு சுமார் 4600 கிலோமீட்டர்கள் பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜப்பான் பிரதமர் புனியும் கிஷிதா இந்த ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்தது மட்டுமல்லாமல் வடகொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை மோசமானது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஏவுகணையை சுட்டு வீழ்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் இருந்து மீண்டும் ஏவுகணை ஏவப்படுவதை எதிர்கொள்ளும் விதமாக ஜப்பான் தனது பாதுகாப்பை பலப்படுத்த விரும்புவது விரும்புவதால் எதிர் தாக்குதல் திறன் உள்ளிட்ட எந்த விருப்பங்களையும் நிராகரிக்காது என பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹாமாடா தெரிவித்துள்ளார்.

தென் கொரியா தனது ராணுவத்தை மேம்படுத்துவதற்காகவும் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்டரியன் வாட்சன் ஒரு அறிக்கையில் பேசிய போது ஜப்பான் மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை செலுத்தும் வடகொரியாவின் ஆபத்தான பொறுப்பற்ற முடிவை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் இந்த நடவடிக்கை ஸ்திரத்தன்மை மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை வடகொரியா அப்பட்டமாக புறக்கணிப்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் செவ்வாய்க்கிழமை வடகொரியா ஏவியது பாலிஸ்டிக் மற்றும் ப்ரூஸ் ஏவுகணைகள் உட்பட இந்த வருடம் நாட்டின் 23வது ஏவுகணை சோதனையாகும்.