ஜப்பானில் 1கிலோ மாம்பழம் ரூ.40 ஆயிரம்… அப்படி என்ன ஸ்பெஷல்..!!!

உலகில் விலை உயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழம் ஒரு கிலோ 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக மாம்பழம் கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்கும். ஆனால் மியாசாகி மாம்பழங்களை தங்கத்தின் விலைக்கு சமமாக விற்பது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கர்நாடகா மாநில கண்காட்சியில் இம்மாம்பழம் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ மேலாவை தோட்டக்கலைத்துறை நடத்துகிறது.  இந்த ஆண்டு மாம்பழ மேலா கடந்த மே 23ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது . இந்த ஆண்டு மாம்பழ மேலாவில் விலை உயர்ந்த மாம்பழங்களை மத்திய பிரதேசத்திலிருந்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கண்காட்சிக்கு கொண்டு வந்தனர். இந்த அதிசய மாம்பழத்தை ஆச்சரியத்துடன் மக்கள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Leave a Reply