
வருகிற ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராஜன் நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சிவஞானம் சாலையில் உள்ள அஞ்சல் துறையின் மத்திய மண்டல அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைகேட்பு கூட்டம் வரும் 12-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை தியாகராய நகரில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் வடக்கு மற்றும் தெற்கு அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் இந்தி பிரச்சார சபா அஞ்சல் அலுவலகத்திலும் தெரிவிக்கலாம். வருகிற ஜனவரி 9-ம் தேதிக்குள் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகம், மந்தைவெளி அஞ்சல் அலுவலகம், விவேகானந்தா கல்லூரி மற்றும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9786254257 என்ற வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.