ஜனவரி 28ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலை வாய்ப்பு முகாம் மாநில அரசின் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகின்ற சனிக்கிழமை சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் எனவும் இதில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலை தேடுபவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள வரும்போது ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ் போன்ற சுயவிவர ஆவணங்களை எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply