தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படமானது, தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு இயக்குனர் இணைந்து தயாரிக்கும் தமிழ் படமாகும். இந்நிலையில்  வருகின்ற ஜனவரி 11-ஆம் தேதி துணிவு படத்திற்கான தெலுங்கு டப்பிங்  ‘தெகிம்பு’ என்ற படம் வெளியாக உள்ளதாக  விளம்பரம் வெளியானது. ஆனால் வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங் “வாரிசுடு” என்ற படத்திற்கு இன்றுவரை சங்கராந்தி அன்று வெளியிடப் போவதாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜயின் வாரிசு படம் தமிழில் ஜனவரி 11-ஆம் தேதி அன்று வெளியாகும் நிலையில், தெலுங்கு டப்பிங் வாரிசுடு பட வேலைகள் இன்னும் முடியாததால், அன்று வெளியாகாது என தெரிகிறது. அதனால் பட வெளியிட்டை ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் தள்ளி வைக்கலாம் என யோசித்து வரும் நிலையில், அப்படி ஒருவேளை  வெளியிட்டால் அந்த படம் மீண்டும், சிக்கலில் தான் முடியும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து நடிகர் விஜய் தயாரிப்பாளர் மீது கடுமையான கோபத்தில்  இருப்பதாக கூறி வருகிறார்கள். வாரிசு படத்தின் தெலுங்கு டிரைலரான ‘வாரிசுடு’ டிரைலர் யுடியுபில் 50 லட்சம் பார்வைகளைக் கடந்து  ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.