ஜடேஜா இடத்தை பிடிக்க போட்டி நடக்குது…. ஓபனாக பேசிய முன்னாள் வீரர்…. ஆனா அது அஸ்வின் கிடையாதாம்….!!!!

இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை பிடிப்பதற்காக ஷர்துல் தாகூர் சிறப்பாக விளையாடி அவரது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அதன்பின் நடைபெற்ற தென்ஆப்பிரிக்க தொடரில் இவரால் பங்கேற்க முடியவில்லை. இதனை அடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் டி20 தொடரிலும் இவரால்  பங்கேற்க முடியாமல் போனது. தற்போது ஜடேஜாவுக்கு காயம் சரியான நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 டெஸ்ட் தொடரில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

ஆனால் மற்றுமொரு ஆல்ரவுண்டர் ஆன ஷர்துல் தாகூரின் பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றாக வைத்து தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது,  ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி இருப்பதாக கருதுகிறேன். எனினும் ஜடேஜா முழு உடல் தகுதி பெற்று பணிக்கு திரும்பியதும், ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டதை ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக கடந்த சில வருடங்களாகவே ஜடேஜாவின் பேட்டிங் சிறப்பானதாக இருக்கிறது. அதிலும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அவர் இடது கை வீரர். இந்நிலையில் ஷர்துல் தாகூரால் ஜடேஜாவுக்கு எதிராக போட்டி போட முடியாத சூழ்நிலை இருக்கிறது எனவும், இந்திய அணி நிர்வாகம் இடது கை வீரர் என்பதால் ஜடேஜாவுக்கு தான் அதிக வாய்ப்புகள் கொடுக்க முனைப்பு காட்டும். இவ்வாறு சஞ்சய் பங்கர் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பற்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *