கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு சிறுமி தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு 17 வயது ஆகிறது. கடந்த 21-ஆம் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியின் பெரியப்பா பாபு(55) என்பவர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்வது தெரியவந்தது. மேலும் இதை வெளியே சொன்னால் படிக்க விடமாட்டேன் என அவர் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை கைது செய்தனர்.