பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைகின்றனர். பெண்களின் உள்ளாடைகளை திருடி அதை வைத்து இன்பம் காணும் சைக்கோவும் உள்ளனர்.
அந்த வகையில் திருநெல்வேலியில் ஒருவர் கொடியில் காய போட்டு இருந்த பெண்களின் உள்ளாடைகளை திருடி சென்றுள்ளார். அந்த நபர் யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டு அதனை திருடி தனது பாக்கெட்டில் போட்டு செல்கிறார். டீ சர்ட், பேண்ட் அணிந்த கண்ணாடி போட்டிருந்த அந்த நபருக்கு நடுத்தர வயது இருக்கும். அவர் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.