ச்சீ…! அது பார்த்துலாம் வாக்களிக்கல…. நானும் மனுஷன் தான்…. மக்கள் செல்வன் பதிலால் அரண்டு போன அதிமுக – பாஜக …!!

தமிழகம் முழுவதும் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. திரைபிரபலங்கள் பலரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினார். இந்நிலையில் நேற்று வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதியிடம், ஜாதி மதத்திற்கு எதிராக வாக்களியுங்கள் என ஏற்கனவே சொல்லி இருந்தீங்க ? என கேள்வி கேட்கப்பட்டதற்கு, அது  நான் 2019இல் சொன்னது என தெரிவித்தார். இப்போது அந்த நிலைப்பாட்டில் எப்படி இருக்கீங்க ? என்ற கேள்விக்கு, எப்போது அதான் நிலைப்பாடு.  என்னை பொறுத்த வரை  மனுஷன் தான் முக்கியம்,

மனுஷன் தான் எல்லாமே. இப்போது ஓட்டு போட்டது கூட அந்த நிலைப்பாடாக இருக்கலாமா ? என்ற கேள்விக்கு எத்தனை வருஷம் ஆனாலும் இதுதான் நிலைப்பாடு, நானும் மனுஷன் தான் என பதிலளித்தார். விஜய்சேதுபதியின் இந்த பதில் ஜாதி, மதம் பார்க்காமல் வாக்களித்ததை உணர்த்துகிறது. ஏற்கனவே நேற்று விஜய் பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக செய்திகள் பரவி ஆளும் மத்திய, மாநில அரசுக்களை அதிர்ச்சி அடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.