“சொன்னபடியே செஞ்சிட்டாரே” அமெரிக்கா நிர்வாகத்தில் 25 இந்தியர்கள்…. குவியும் பாராட்டு…!!

ஜோ பைடன் நிர்வாகத்தில் 25 இந்தியர்கள் பொறுப்பேற்க உள்ள விஷயம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிபர் ட்ரம்ப் தேர்தல் வாக்குறுதியாக H1B விசாவுக்கு தடை விதித்தார். இந்த விசா மூலம் இந்தியர்கள் மற்றும் உலக நாட்டிலுள்ள பலரும் அமெரிக்காவிற்கு சென்று பணிபுரிய பயனுள்ளதாக இருந்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டு அங்கு வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரு விசாவாகும். இந்த விசா மூலம் பல இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தனர்.

இப்படி இந்த விசாவுக்கு ட்ரம்ப் தடை விதித்ததால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு போய் வேலை பார்க்கின்ற ஒவ்வொரு இந்தியர்களின் கனவு நிறைவேறாமல் இருந்தது. மேலும் அங்கு இருக்கிற இந்தியர்களுக்கும் பணி பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இது மாதிரியான விஷயங்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இருந்தது. அமெரிக்க மக்களுக்கு மட்டும் தான் பணி என்ற அடிப்படையில் ட்ரம்ப் இந்த விசாவுக்கு தடை விதித்தார். இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் தன்னுடைய வாக்கு சேகரிப்பில் நான் ஆட்சிக்கு வந்தால் H1B விசா தடை நீக்கத்தை தடை செய்ய உத்தரவு போடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் பெரும்பாலான இந்தியர்கள் அமெரிக்காவில் வந்து பல பணிகளில் ஈடுபடலாம் என்றும் கூறினார். அவர் சொன்ன படியே தற்போது ஒரு விஷயம் நடந்திருக்கிறது. என்னவென்றால், அதிபர் தரம்பின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம் பெறுவார்கள் எனவும், அதில் 15 பேருக்கு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.