சொன்னதுபோல செஞ்சு காட்டுங்க முதல்வரே…. ஓபிஎஸ் கோரிக்கை…!!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி இருந்ததை போல செய்து காட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்துள்ளது.  இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 55 காசும்,  டீசல் விலை 19 ரூபாய் குறையும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். மேலும் இதர பாரத ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்கள் குஜராத், கர்நாடகா, கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் 7 ரூபாயும், உத்தரப்பிரதேச மாநிலங்களில் 12 ரூபாயும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை மீதான மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டது போல, தமிழகத்திலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தேர்தல் பிரசாரத்தின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது, சொன்னதுபோல முதல்வர் செய்து காட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *