சொந்த வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கு….! ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…. முழு விவரம் இதோ…!!

மதிய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையின் அறிவிப்பை ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 6.50 ஆக நிர்ணயம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இதனால் வீடு, வாகனம், தனி நபர்கள் வட்டி விகிதமும் அதிகரிக்க போகிறது. இதன் மூலம் மாதத் தவணை முறையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கும் பல நடுத்தர மக்களின் கனவு குலைந்து விடும் அளவிற்கு இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவை என்பது குறித்து மணி கண்ட்ரோல் லியஸஸ் ஹவுஸ் பர்சேஸ் அப்பர்டபிலிட்டி (MLFHPA) என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதன்படி சென்னையில் ஒரு வீடு வாங்க 511 மாத வாடகை தேவைப்படுகிறது. அதிகபட்சமாக விசாகப்பட்டினத்தில் 606 மாத வாடகையும், குறைந்த பட்சமாக வதோதராவில் 298 மாத வாடகையும் தேவைப்படுகிறது. இது நாட்டின் முக்கிய நகரங்களின் சராசரி மாத வாடகையை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.