சொந்த ஊர் நாளே தனி மவுசு தான்…. அ.தி.மு.க வேட்பாளருக்கு மிகுந்த வரவேற்பு…. மதுரையில் சூடுபிடிக்கும் பிரச்சாரம்….!!

மதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் தாங்கள் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் வி.வி ராஜன்செல்லப்பா அவர்கள் தனது சொந்த ஊரான சங்கிலிப்பட்டிக்கு சென்று பிரச்சாரம் செய்துள்ளார்.

அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். அதன் பின் மக்கள் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில் இரட்டை இலை படத்தை வரைந்து தங்கள் ஆதரவை அ.தி.மு.கவிற்கு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் அ.தி.மு.க அரசு அறிவித்த பல நலத்திட்டங்களை பிரச்சாரத்தில் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரித்தார்.