வணிக வளாகம் மற்றும் அலுவலகம் ஆகியவற்றை சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு ஆலோசனை கூட்டமானது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோடு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதி இயக்குனர் டாக்டர் பிரசன்ன குமார் ஆச்சாரியா தலைமையில் நடைபெற்றது. இதில் மெட்ரோ யில் நிலையங்களில் காலியிடங்கள் இருப்பதால் தொழில் தொடங்குபவர்கள் வணிக வளாகம் அல்லது அலுவலகம் அமைக்கலாம் எனவும் அதற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் வணிகம் மேம்பாட்டிற்கு பல யுத்திகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்கள், அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க தேவையான இடவசதி உள்ளது. நேரு பூங்கா, சைதாப்பேட்டை, அரும்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி ஆகிய பகுதிகளில் 3000 சதுர மீட்டர் முதல் 10,000 சதுர மீட்டர் வரை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.