“சொத்தை பிரித்து தாங்க” அண்ணனை காலால் மிதித்து கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்…!!

சொத்து தகராறில் தம்பி அண்ணனை காலால் மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒடுக்கூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நான்கு தம்பிகள், இரண்டு தங்கைகள் இருக்கின்றனர். இவர்களுக்குரிய சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் பழனிச்சாமியின் 4-வது தம்பி சிவசாமி என்பவர் சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று அண்ணன் தம்பிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் சிவசாமி பழனிச்சாமியை கீழே தள்ளி விட்டுள்ளார்.

அதன்பிறகு பழனிசாமியின் தலையை தரையில் மோதியும், காலால் மிதித்தும் சிவசாமி அவரை கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *