சொத்து வரி, மின் கட்டணத்தை தொடர்ந்து….. குடிநீர் வரியும்….. பொது மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்….!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் குடியிருப்புகளுக்கு சொத்துவரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை நகரின் பழைய பகுதிக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்துள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்துவரி உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது. ஏப்ரல் செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சொத்து வரியை தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த மாதம் முதல் அதுவும் நடைமுறைக்கு வருகின்றது.

இந்நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் ஏழு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம். சொத்தின் ஆண்டி மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. இதில் 23 சதவீதம் சொத்து வரியாக மாநகராட்சி வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் 7% குடிநீர் வரியாக சென்னை குடிநீர் வாரியம் வசூல் செய்கின்றது. குடிநீர் வரி உயர்வும் கடந்து ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.