
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடையநல்லூர் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் சிறுவனை முந்தி சென்று விளையாட்டாக அடிக்க முயன்றதாக தெரிகிறது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக ஒரு வீட்டின் முன்பக்கமாக சரிந்து படிக்கட்டில் கவிழ்ந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று ஆட்டோவை தூக்கினர். பின்னர் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று சைக்கிளில் சென்ற சிறுவனை முந்த முயன்ற ஓட்டுநர், விளையாட்டுக்கு அடிக்க முயன்ற போது, வினையானது. #thenkasi, #nellai, #autorace pic.twitter.com/4BQKfdUkVH
— velmurugan (@velmurugantheni) January 21, 2025