சேலம் மேட்டூர் காவிரி ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். சேலம் மாவட்டத்தில் செக்கனூர் கதகணை மின் நிலையம் உள்ளது. இங்கே தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் அனல் மின் நிலையம் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் டன் கணக்கில் மீன்கள் இரண்டு கரைகளில் இறந்து மிதந்து வருகிறது. இந்நிலையில் இரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் காவேரி ஆற்றல் கலக்கப்படுவதால் மீன்கள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இறந்த மீன்களை அள்ளி சென்று காய வைத்து விற்பனை செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.