செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு….. 6 மாத மகப்பேறு விடுப்பு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் 4848 செவிலியர்களுக்கு ரூபாய் 18 ஆயிரமாக சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்த தொடர்ந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்ற.து அந்த திட்டத்தில் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தில் பணியாற்றும் 4848 செவிலியர்களுக்கு மாத சம்பளம் பதினெட்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இதேபோல் சுகாதார பணியாளர்களுக்கு ரூபாய் 11,000ல் இருந்து 14 ஆயிரமாக ஊதிய உயர்வு வழங்கப்படும். 5,971 பேருக்கு 32 கோடியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வு செவிலியர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *