செல்வாக்கு மன்னன்….. தொடர் வெற்றி…. டிடிவி தினகரனின் அரசியல் வாழ்க்கை….!!

டிடிவி தினகரன் தமிழ்நாட்டு அரசியல் வாதியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் ஆவார். இவர் சசிகலாவின் அக்கா மகனாவார். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர். இதையடுத்து  2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேர்தலில் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004-ல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெயலலிதாவால் 2011ஆம் வருடம்  டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் விலக்கி வைக்கப்பட்ட பிறகு சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். இதையடுத்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் டிடிவி தினகரனை 2017இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.

இதையடுத்து ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை 2017-ல் டிடிவி தினகரன் சட்டமன்றத்தில் வெற்றி பெற செய்ததில் பெரும் பங்காற்றியவர். இதையடுத்து 2017 இல் நடைபெற்ற ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 2018 ஆம் வருடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில் தற்போது டிடிவி தினகரன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *