செல்ல மகனை அறிமுகம் செய்த ஸ்ரேயா கோஷல்… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

கடந்த மே 22-ஆம் தேதி பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் தனது இனிமையான குரல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . மேலும் இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல்  கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரேயா கோஷலுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘தேவ்யான் முகோபாத்யாயாவை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி’ என பதிவிட்டு தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *