செல்லத்தனமான சுட்டி குறும்பு…. காப்பாளரை கொஞ்சி விளையாடும் குட்டி யானை…. வைரலாகும் வீடியோ….!!!!

குட்டி யானை ஒன்று தனது காப்பாளரிடம் சேட்டை செய்து கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாகவே வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகள் சிறு சிறு சேட்டைகள் செய்வது வழக்கம்தான். அதனைப் போலவே செல்ல பிராணிகளைப் போல இருக்கும் குழந்தைத்தனமான குணம் காட்டும் காட்டு விலங்குகளும் பல உள்ளன. பொதுவாக யானை என்றால் பெரிய விலங்கு என்றாலும் அதன் மனதளவில் உள்ள சுட்டித்தனங்கள் அதனுடன் பழகினால் மட்டுமே பலருக்கு புரியும்.

இதனிடையே யானை சேட்டை செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வீடியோவில் வலையத்திற்குள் மண்ணை சமன் செய்யும் பணியில் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.அப்போது அங்கிருந்த குட்டி யானை காப்பாளரை பணி செய்ய விடாமல் வம்பு இழுத்து செல்லமான சேட்டைகளை செய்கின்றது.அவர் விரட்டியும் அந்த குட்டி தொடர்ந்து தனது குறும்புத்தனமான சேட்டைகளை செய்யும் நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.