செல்போன் வாங்குவதற்காக அனுப்பிய பணம்…. தந்தை அடித்து கொலை… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மகன் அனுப்பிய பணத்தை கேட்ட தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரப்புடையான் கிராமத்தில் சின்னக்காளை  என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற மகனும், மகளும் உள்ளனர். மணிகண்டன் திருப்பூரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த நிலையில் தனது தங்கைக்கு  செல்போன் வாங்கிக் கொடுப்பதற்காக உறவினரான மணிவேல் என்பவரின் வங்கி கணக்கில்  10,000 ரூபாயை அனுப்பியுள்ளார். மகன் அனுப்பிய பணத்தை கேட்ட சின்னக்காளை குடும்பத்திற்கும், மணிவேல் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  சின்னக்காளை மீண்டும் தனது மகன் அனுப்பிய பணத்தை கேட்டு மணிவேல் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த சின்னக்காளையின் மனைவி தனது கணவரை தேடி சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு அருகே சின்னக்காளை சடலமாக கிடந்ததை கண்டு முத்துலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னக்காளையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *