செல்போன் நிறுவனத்திற்கு ரூ. 25 ஆயிரம் நஷ்டஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி மலை பகுதியில் பட்டதாரியான அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தின் சிம் கார்டை உபயோகப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மாதாந்திர தொகையை செலுத்த சென்ற போது ஊழியர் புதிய பிளான்கள் வந்துள்ளது எனவும், அதில் சேர்ந்தால் அதிக பலன் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி அன்பு அந்த பிளானில் சேர்ந்த பிறகு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என நிறுவன ஊழியர்கள் தொந்தரவு செய்துள்ளனர்.

மேலும் அவரது ‘சிம்’ கார்டையும் முடக்கியுள்ளனர். இதனால் அன்பு கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் ஆணைய நீதிபதி செல்போன் நிறுவனத்திற்கு அன்பு செலுத்திய கட்டணத்தை வட்டியுடன் சேர்த்து அவருக்கு திரும்ப கொடுக்க வேண்டும். 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.