செல்போனில் விளையாடி கொண்டிருந்த மாணவி…. மகளைக் கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாமல் நீண்ட நேரம் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த கற்பகவள்ளியை அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற கற்பகவள்ளி அப்பகுதியில் இருக்கும் குளத்து தண்ணீரில் குதித்தார். இதனால் தண்ணீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற மாணவியின் உடலை விட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *