செல்போனில் இனிக்க இனிக்க பேசிய பெண்…. எமர்ந்துபோன வாலிபர்…. பரபரப்பு புகார்….!!!!!

ராஜஸ்தான் சிகார் சதார் பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ். இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவற்றில் பேசிய பெண் நாளடைவில் நட்பாக பழகி வந்துள்ளார். இதையடுத்து அப்பெண் இளைஞரிடம் பேசி, ஒருநாள் இருவரும் சந்திந்துக்கொள்ள முடிவுசெய்து முதல் முறையாக கதுஷ்யாம்ஜியில் பார்த்துள்ளனர். அப்போது சுபாஷின் முழு நம்பிக்கைக்கு உரியவராக அப்பெண் மாறி இருக்கிறார். சில தினங்களில் சுபாஷ் அப்பெண்ணிடம் திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு அப்பெண்ணும் இதுகுறித்து என் தந்தையிடம் பேசுங்கள் எனக்கூறி ஒரு நபரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

3 பேரும் சந்தித்து பேசி திருமணத்துக்கும் சம்மதித்திருக்கின்றனர். இதனிடையில் அப்பெண் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதனால் தன்னுடன் தங்கியிருக்கிமாறு ஒரு ஹோட்டலுக்கு சுபாஷை ஆசை வார்த்தை கூறி அழைத்திருக்கிறார். அதனை நம்பி சுபாஷ் சென்றுள்ளார். அப்போது ஹோட்டலில் இரண்டு பேரும் ஒன்றாக தங்கி இருந்தபோது சுபாஷை நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்திருக்கிறார். அதன்பின் சில நாட்களில் சுபாஷிடம் பேசுவதை அப்பெண் தவிர்த்திருக்கிறார். அத்துடன் சுபாஷ் போன் செய்தும் அவர் செல்போனை துண்டித்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண்ணின் தந்தையாக அறிமுகமாகிய அந்த நபரை அழைத்து சுபாஷ் விசாரித்திருக்கிறார். அதற்கு அந்த நபர் “என் மகள் திருமணத்துக்கு மறுத்து விட்டாள். இதனால் அவளை தொந்தரவு செய்யவேண்டாம்” எனக் கூறியிருக்கிறார். அதன்படி சுபாஷும் அப்பெண்ணுடன் பேசுவதை செல்போனில் தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் திடீரென்று சுபாஷின் ஆபாசபடங்கள் மற்றும் வீடியோக்களை அவருக்கு அனுப்பி, ரூபாய்.10 லட்சம் தரவேண்டும் இல்லையெனில் இந்தப் புகைப்படங்களை உன் குடும்பத்தினர், நண்பர் என அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என அப்பெண் மிரட்டி இருக்கிறார்.

அத்துடன் தன்னுடன் ஒரு பெரிய குழு இயங்குவதால் உன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறியிருக்கிறார். இதை  கேட்டு அதிர்ச்சியடைந்த சுபாஷ் தனக்கு நடந்தது நாடகம் என புரிந்துகொண்டார். உடனடியாக  சுபாஷ் காவல் நிலையப் பகுதியில் இதுகுறித்து புகாரளித்திருக்கிறார். அதன்படி காவல்துறை இதுகுறித்து விசாரணையை நடத்தி வருகின்றனர். ஆகவே தெரியாத நம்பரிலிருந்து வரும் போன் கால்களை எடுக்க வேண்டாம் என்று சுபாஷிடம் காவல்துறையினர் அறிவுறுத்தி இருக்கின்றனர்.