பெண்களைத் தொட்டால் ஷாக் அடிக்கும் வகையில் தஞ்சையை சேர்ந்த பொறியாளர் ஒருவர் புதிய வகை செருப்பை கண்டுபிடித்துள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த இளம் பொறியாளர் அமர்ந்த கணேஷ் சிறுசிறு பயனுள்ள பொருட்களை கண்டறிவதில் ஆர்வம் கொண்டவர். இவர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்துடன் தொடுப்பவர்கள் ஷாக் அடிக்கும் வகையில் செருப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ரகுமான் தெருவை சேர்ந்த இன்ஜினியர் அமிர்த கணேஷ். 34 வயதான இவர் 2008 இல் எலக்ட்ரிக் கம்யூனிகேஷன் படித்து முடித்து வேளாண்மை, மீன்வளர்ப்பு, மருத்துவம் என ஆறு நூறு வகை சிறு சிறு பொருட்களை கண்டுபிடித்துள்ளார்.

கழிவுநீர் தொட்டி, தொழிற்சாலை கிடங்குகளில் விஷவாயு உள்ளதை அறியாமல் சுத்தம் செய்ய இறங்கி தொழிலாளர்கள் பலியாகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் விஷவாயு கண்டறியும் கருவி கண்டுபிடித்துள்ளார். தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக நிர்பயா செருப்பு என்று உருவாக்கியுள்ளார். இந்த செருப்பில் சென்சார், மைக்ரோ பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட வேகமாக நடந்தால், ஓடினால் செருப்பில் உள்ள சென்சார் 200 மீட்டர் சுற்றளவுக்கு ஒலி ஏற்படுத்தும். அதில் மின்சாரம் உற்பத்தி ஆகிய எதிரில் உள்ளவர்களை மிதித்தால் எதிரிக்கு எலக்ட்ரிக் ஷாக் அடிக்கும் இந்த வகையில் இந்த செருப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.