சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம் .தற்போது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக உள்ளது. அந்த வீடியோவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து வரும் தனது தாயை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு பாலஸ்தீனிய-அமெரிக்க நகைச்சுவை நடிகர் அன்வர் சென்றுள்ளார். அன்வர் தனது கையில் உன்னை மிஸ் செய்தோம் என்று எழுதப்பட்ட பலகையுடன் கையில் ஒரு பூங்கொத்தை வைத்துக்கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த தனது தாயைப் பார்த்து ஓடிச் செல்கிறார்.
ஆனால் அவரது தாய் தனது செருப்பை கழட்டி அடிக்க துவங்குகிறார். ஒன்றல்ல இரண்டல்ல பலமுறை அன்வரை செருப்பால் தாக்கி மழை பொழிகிறார். அப்போது எதுக்கு என்னை அடிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு அடிங்க அம்மா என்று அந்த நடிகர் கதறுகிறார். இந்த வீடியோ எனது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.