தனியா எங்கேயும் வெளியே போக முடியல… பெண்ணுக்கு நடந்த கொடுமை…. காவல் துறையின் தீவிர விசாரணை..!!

மொபட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியிராக பணிபுரியும் ஆர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ஆர்த்தி  மேச்சேரி- ஓமலூர் சாலையில் மொபட்டில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மர்ம நபர்  ஆர்த்தி கழுத்திலிருந்த  5 3/4 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஆர்த்திக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிறகு ஆர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.