செம ஹேப்பி…. அவங்கள விட்டுட்டு எங்க திருமணத்த டிரெண்டிங் ஆக்கிட்டாங்க…. ரவீந்தர் ஓபன் டாக்….!!!!

சன் மியூசிக்கில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இது 2 பேருக்குமே 2-வது திருமணம். இவர்களின் திருமணம் தான் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.  இந்த ஜோடிகளுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருமே விமர்சனங்களை எல்லாம் தைரியமாக எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எல்லாரையும் போன்று தான் எங்களுக்கும் திருமணம் நடந்துள்ளது. இது  ஒன்றும் அவ்வளவு பெரிதான விஷயம் கிடையாது. ஆனால் மிகப்பெரிய சம்பவமாக மாற்றி விட்டார்கள். எங்களுடைய திருமணத்தை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலர் சம்பாதித்து விட்டார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. இதன் மூலம் எனக்கு ஒரு பெரிய பிரேக் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட உச்ச நட்சத்திரங்களுக்கு (நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு) திருமணம் நடந்தது. ஆனால் அதைவிட பெரிய பேசும் பொருளாக எங்களுடைய திருமணத்தை மாற்றி விட்டார்கள் என்றார்.