தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பென்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகளுக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் அத்து மீறலில்  ஈடுபட்டதாக தற்போது புகார் எழுந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்றபோது அங்கு வைத்து மது கொடுத்து அவர்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இதனால் கொந்தளித்த பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் பென்சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.