தெலுங்கானா மாநிலத்தில் சோப் தண்டி தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக மெடிப்பள்ளி சத்தியம் இருக்கிறார். இவருடைய மனைவி ரூபா தேவி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் ரூபா தேவி கடந்த இரு நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்துள்ளார். இதற்கிடையில் நேற்று  தொகுதிக்கு சென்ற எம்எல்ஏ நேற்று மாலை வரை அங்கேயே இருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவில் அவர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் படுக்கையறையில் அவருடைய மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து மிகுந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற ரூபா தேவியின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆளும் கட்சி எம்எல்ஏவின் மனைவி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.