
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் தீபிகா படுகோனே காவிநிற உலகில் கவர்ச்சியாக நடனம் ஆடியதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இன்று பதான் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பதான் படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலரில் ஹாலிவுட் படங்களில் வருவது போன்று மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி , வருகிற 25-ம் தேதி பதான் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மேலும் நடிகர் விஜய் முதல் முறையாக மற்றொரு நடிகரின் பட டிரைலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Wishing @iamsrk sir and the team all the best for #Pathaan
Here is the trailer https://t.co/LLPfa6LR3r#PathaanTrailer
— Vijay (@actorvijay) January 10, 2023