செம ட்ரெண்ட் ‘என்ஜாயி எஞ்சாமி’… காட்டுவாசி வேடத்தில் அசத்திய பிக்பாஸ் நடிகை… வைரலாகும் வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலம் ஜூலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ மற்றும் அறிவு இருவரும் பாடி நடித்துள்ள பாடல் என்ஜாயி எஞ்சாமி. தற்போது இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது . மேலும் இந்த பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனால் இந்த பாடல் குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலி இந்த பாடலுக்கு  வீடியோ பதிவு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் காட்டுவாசி வேடத்தில் ஜூலி எடுத்த புகைப்படத்தை வைத்து என்ஜாயி எஞ்சாமி பாடலுடன் இந்த வீடியோவை தனது ரசிகர் ஒருவர் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.