தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சஞ்சய் தத் மற்றும் சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான VFX பணிகள் முடிவடைய தாமதம் ஏற்படும் என புது தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜயின் லியோ படம் ரிலீஸ் ஆகும், அதே நாளில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வனுடன் மோதினால் நடிகர் விஜயின் லியோ படத்தின் வசூல் பாதிப்படையலாம் என்று கூறப்படுகிறது.