செம ஆஃபர்…. வெறும் 10 பைசாவுக்கு ஒரு பார்சல் பிரியாணி…. முந்தியடித்து கொண்டு ஓடிய பிரியாணி பிரியர்கள்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அண்ணா சிலை அருகில் ராவுத்தர் கல்யாண வீட்டு பிரியாணி என்ற பெயரில் புதிய ஹோட்டல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் தொடக்கவிழா சலுகையாக முதல் 200 நபர்களுக்கு பழைய பத்து பைசா நாணயம் கொண்டு வந்தால் ஒரு பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் முன்பு பிரியாணி பிரியர்கள் குவிய தொடங்கினர். முதலில் பத்து பைசா நாணயம் கொண்டுவந்த 300 பேருக்கு ஒரு பிரியாணி தாழ்ச்சா, தயிர் வெங்காயம், பாசிப்பருப்பு பாயாசம் அடங்கிய ஒரு பார்சல் வழங்கப்பட்டது.

இதையடுத்து 300 பேரை தாண்டி பத்து பைசா நாணயம் கொண்டுவந்த பிரியாணி பிரியர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக பிரியாணி கடைகள் திறக்கப்படும் கடையை விளம்பரப்படுத்தும் வகையில் பத்து பைசா பிரியாணி ஆஃபர் வழங்கப்படுவது கடந்த சில நாட்களாகவே வழக்கத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *