செப்டம்பர் 30 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு… புதிய அதிரடி அறிவிப்பு…!!!

ஆட்டோ டெபிட் நடவடிக்கைகளுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பில், மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் சந்தா கட்டணங்கள் உள்ளிட்ட மாதாந்திர கட்டணங்களை மாதம் மாதம் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்து வங்கிகள் செலுத்தும் முறையை ஆட்டோ டெபிட் என்று சொல்கிறோம். இதற்கு வங்கிகளுக்கு வாடிக்கையாளர் தொடக்கத்தில் ஒரு முறை அனுமதி கொடுத்தால் போதும்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி ஆட்டோ டெபிட் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. அதற்காக புதிய கட்டுப்பாடுகள் 2020 ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என ஆர்பிஐ அறிவித்திருந்தது. இதற்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் கோரிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.