சென்னை விமான நிலையத்தில் நவீன வசதியுடன் வந்தாச்சி…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகன நிறுத்தும் முனையம்  இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ரூ.250 கோடி மதிப்பில் 6 அடுக்குகளில் உருவான இந்த முனையத்தில் 2,150 வாகனங்களும், 400 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார் பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். மேற்கு பகுதியில் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த கார் பார்க்கிங்கில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய 5 பாயிண்டுகள் உள்ளன. மேலும் இங்கு மாற்று திறனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால், இந்தியாவில் முதல் முறையாக நவீன வசதிகளுடன் கூடிய கார் பார்க்கிங் சென்னையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.