சென்னை வாசிகளே!…. இந்த 3 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

75வது சுதந்திரதின விழா வரும் 15-ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 6, 11, 13-ம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம்வரை சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதாவது,

# நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையுள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வடக்கு பகுதிவரையுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடி மரச்சாலை ஆகியவைகளில்  வாகன போக்குவரத்து தடைசெய்யப்படும்.

# காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியே பாரிமுனையை நோக்கி போகும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்கசாலை (என்.எப்.எஸ். ரோடு) வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.

# பாரிமுனையில் இருந்து ராஜாஜிசாலை வழியே காமராஜர் சாலை நோக்கி போகும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்கசாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

# அண்ணா சாலையில் இருந்து கொடிமரச் சாலை வழியே பாரிமுனை போகும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

# முத்துசாமி சாலையில் இருந்து கொடிமரச் சாலை வழியே காமராஜர் சாலை போகும் வாகனங்கள் அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

ஆகவே இந்த நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *