சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்ட உள்ளார். டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் விரைவில் அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.