சென்னை, மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு தொடங்கவில்லை…!!!

சென்னை மதுராந்தகத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.

இந்நிலையில் சென்னை மதுராந்தகம் மாரிபுத்தூர் வாக்குச் சாவடியில் இயந்திர கோளாறால் வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை. பூந்தமல்லி பாப்பன் சத்திரத்தில் 2வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. ஆதம்பாக்கம் ஜிகே செட்டிபள்ளி வாக்கு இயந்திரம் பழுதானால் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.